After Registration

After Registration / பதிவு செய்ததும் செய்ய வேண்டியவை:

அன்புடையீர்,

வணக்கம். எங்களிடம் பதிவு செய்ததற்கு நன்றி.

  • Have you paid the Registration fee of Rs. 1000/-. If not, please send immediately and inform us. We would like to inform that out of this Registration fee, a sum of Rs.200,- will be given to Sri Kannika Parameswari temple at Cheyyar.
  • பதிவுக் கட்டணம் ரூ. 1000 /- அனுப்பி விட்டீர்களா? இல்லை என்றால் உடனே அனுப்பி எங்களுக்கு அத்தாட்சியுடன் தகவல் எழுதவும். இந்தத் தொகையில் ரூ.200/- செய்யாறு ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்கு வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
  • Did you scan, upload and affix your photo on the application. If not, please send us your photo(With your name written on the backside)
  • போட்டோ ஸ்கேன் செய்து விண்ணப்பப் படிவத்தில் பொருத்தி விட்டீர்களா? இல்லை என்றால் உடனே எங்களுக்கு போட்டோவை, (பின்பக்கம் பெயர் எழுதி) அனுப்பவும்.
  • Please remember or make a note of your "Secret Code Number" without fail. You can select your life partner from this website all the seven days of a week and 24 hours of a day.
  • தங்கள் ரகசியக் குறியீட்டு எண்ணை மறக்காமல் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும். அல்லது குறித்து வைத்துக்கொள்ளவும். தாங்கள் வாரத்தில் 7 நாட்களும், 24 மணி நேரமும் தங்கள் வாழ்க்கைத் துணையாக வரவுள்ளவரைத் தேர்ந்தெடுக்கலாம்.
  • Hope you know that we provide the details of matching boys/girls based on your expectations. Also hope that it simplifies your job.
  • தங்கள் விருப்பங்களை நன்றாகக் கேட்டு அதன்படி தகுந்தவர்களின் விவரங்களை வழங்குவதன் மூலம் தங்கள் வேலையைப் பெருமளவு குறைத்துள்ளோம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள்!
  • We have made arrangements to let you know the matching stars depending upon the star of the boy/girl.
  • நட்சத்திரப் பொருத்தம் கூட நீங்கள் பார்க்க வசதி செய்துள்ளோம்.
  • It is very important to know that "Moolam" and "Aayilyam" are also good stars. We can show that a lady of "Moolam" star is leading a happy married life for the past 33 years. Her father-in-law, who is of 90 years, is able to travel in bus and go to his sons' houses independently. We can cite so many examples like this
  • ஒரு முக்கியமான விஷயம். மூலம், ஆயில்யம் நட்சத்திரங்கள் கூட நல்ல நட்சத்திரங்கள் தான். எங்கள் தங்கைக்கு மூலம் நட்சத்திரம். அவளுக்குத் திருமணம் ஆகி 33 வருடங்கள் ஆகின்றன. 90 வயது ஆன அவளது மாமனார் இன்றும் தனியாகவே பஸ் ஏறித் தன் மற்ற குமாரர்கள் வீடுகளுக்குச் சென்று வருகிறார். இது போலப் பல உதாரணங்களை நாங்கள் காட்ட முடியும்.
  • While checking the matching of horoscopes of boy and girl. Please stick to a single "Astrologer" or "Prohit" for checking of the matching of horoscopes of boy and girl. (Do not get confused by consulting or seeking of many astrologers/prohits)
  • ஜோசியர் அல்லது புரோகிதரிடம் ஜாதகப் பொருத்தம் பார்ப்பதானால் யாராவது ஒரே ஒருவரிடம் பாருங்கள். ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் காட்டிக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
  • If the horoscopes are matching, please make a thorough enquiry about them. It may be difficult to know about them in cities like Chennai. To make the enquiry process easier, we have requested to provide the addresses of four close relatives. It is probable that you may get an introduction of any of them. We suggest that you can enquire with the Presidents of Vasavi Club, Rotary Club, Lions Club. Mahila Vihab or Arya Vysya Samajam of their place. You may also enquire with the "Reporters" of the magazines like Brahmam, Vasavi Kadatcham, Vasavi Jyothi of their place.
  • ஜாதகம் பொருந்தி இருந்தால் அவர்களைப்பற்றி நன்கு விசாரிக்கவும். சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒருவரைப்பற்றி விசாரிப்பது மிகவும் கடினம். அதற்காகவே நெருங்கிய உறவினர்கள் 4 பேரின் விலாசங்களைக் கொடுக்கச் செய்து உள்ளோம். அவர்கள் யாராவது ஒருவருடன் எந்த வகையிலாவது அறிமுகம் கிடைக்க வாய்ப்பு உண்டு. வாசவி கிளப், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், மகிளா விபாக் ஆகியவற்றின் தலைவர்கள், ஊர் ஆர்ய சமாஜம் தலைவர், மற்றும் நம் சமுதாய இதழ்களான பிரம்மம், வாசவி கடாக்ஷம், வாசவி ஜோதி ஆகியவற்றின் நிருபர்கள் போன்றவர்களிடம் விசாரிக்கலாம்.
  • Try to speak personally with the boy/girl, ofcourse with the knowledge and permission of the parents. You can ascertain from your discussion, whether the boy/girl is keeping good health both physically and mentally.
  • வது / வரன் இடம் தனியாகப் பேசுங்கள். அவர் நல்ல ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் உள்ளவர் தானா என்று நிச்சயித்துக்கொள்ளுங்கள்.
  • We would like to remind you, at this stage, that the details of boys/girls as you see in our website are the details provided by them only. We are in no way responsible for these details.
  • நாங்கள் வழங்கியுள்ள விவரங்கள் யாவும் அவர்களே தங்களைப்பற்றிக் கொடுத்துள்ள விவரங்களே என்பதையும் மேற்படி விவரங்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பல்ல என்பதையும் இந்த நேரத்தில் நினைவு படுத்துகிறோம்.
  • Only after you are convinced and satisfied about the boy/girl, you may send the horoscope to the others and seek their reply.
  • திருப்தி ஆன பிறகு நம் ஜாதகத்தை அவர்களுக்கு அனுப்பிப் பொருத்தம் பார்த்து பதில் தெரிவிக்கும்படி சொல்லலாம்.
  • In case both of you feel that the horoscopes are matching and if you have a girl seeking a matching boy, you can inform the boy's side about the marriage gift(Jewels, silver articles and contribution towards the festivals). You can invite them to see the girl, IF AND ONLY IF, they are agreeable/acceptable for all the above.
  • அவர்களுக்கும் ஜாதகம் பொருந்தி இருக்கும் பட்சத்தில்:-- நீங்கள் பெண் வீட்டுக்காரராக இருந்தால் நீங்கள் உங்கள் பெண்ணுக்குச் செய்யும் சீர்வரிசை—அதாவது உங்கள் பெண்ணுக்குக் கொடுக்கும் நகைகள் எத்தனை பவுன், வெள்ளி சாமான்கள், மாப்பிள்ளைக்கு பண்டிகை மரியாதை, ஆகிய முக்கியமான மூன்று விவரங்களை முன்னதாகவே தெரிவித்து அவர்களுக்குத் தெரிவித்து சம்மதமானால் பெண் பார்க்க வரும்படி சொல்லலாம்.
  • In case the boy and girl like each other, the above said procedure will make things easier. Otherwise, even if the boy and girl like each other, and unexpectedly the marriage could not be fixed due to difference or disagreement on the count of marriage gift, it will lead to unhappy, unhealthy and embarrassing situation. Further the marriage fixing should be smooth. It should not be made like a business, where four people from either side sit and discuss the marriage gifts bargaining with each other. The displeasure that arises between the two parties(in case the marriage is not fixed) may be avoided if the suggested procedure is followed.
  • இப்படி செய்வதால் மணமகளும் மணமகனும் ஒருவரை ஒருவர் பார்த்துப்பேசி சம்மதம் என்று சொன்னபிறகு சீர்வரிசை விஷயத்தில் அபிப்பிராய பேதம் ஏற்பட்டு திருமண சம்பந்தம் நின்றுபோகாமல் இருக்கும். அதுவல்லாமல் திருமணம் என்பது ஏதோ வியாபாரம் போல் ஒவ்வொரு பக்கத்திலும் 4 பேர் உட்கார்ந்து பேரம் பேசுவதும், அதனால் ஏற்படும் மன சங்கடங்களும் தவிர்க்கப்படும்.
  • Let your relatives also be present when the other party comes to see your daughter/boy. It will pass the message that you are in good terms with your relatives. You also may note whether their relatives are present when you go over there to see the boy/girl.
  • அவர்கள் உங்கள் வீட்டுக்குப் பார்க்க வரும்போது உங்கள் நெருங்கிய உறவினர்களைக் கண்டிப்பாக அழையுங்கள். இதன் மூலம் உறவினர்களுடன் உங்களுக்கு சுமுகமான உறவு உள்ளது என்பதை உணர்த்துங்கள். அதே போல நீங்கள் அவர்கள் வீட்டுக்குச் செல்லும்போது நெருங்கிய உறவினர்கள் வந்து இருக்கிறார்களா என்று கவனியுங்கள்.
  • It should be good if a boy gets married before 30 years and a girl gets married before 25 years.
  • ஆணுக்கு 30 வயதுக்குள்ளும் பெண்ணுக்கு 25 வயதுக்குள்ளும் திருமணம் செய்து விடுவது சிறந்தது.
  • At this stage we would like to give a suggestion to the parents of boys.
  • இந்த நேரத்தில் ஆண் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு ஒரு ஆலோசனை சொல்ல விரும்புகிறோம்.
  • These days it is noted that the number of girls who wait for marriage is far below the number of boys who wait for marriage.
  • இந்தக் காலத்தில் திருமண வயது உள்ள ஆண்களின் எண்ணிக்கையை விட திருமண வயது உள்ள பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
  • Do not reject alliances, without believing God, simply based on the result of the matching of horoscopes. Do not reject alliances based on the false impression or idea of "Status".
  • ஆகவே கடவுளை நம்பாமல் ஜோசியத்தை அளவுக்கதிகமாக நம்பி உங்களுக்கு வரும் நல்ல சம்பந்தங்களை நிராகரிக்க வேண்டாம். பணத்தாசையால் "எங்கள் அந்தஸ்துக்குத் தகுந்த இடம் வேண்டும்" என்று போலியாகக்கூறி உங்களுக்கு வரும் சம்பந்தங்களை நிராகரிக்க வேண்டாம்.
  • These days 95% of girls are graduates. They also like to marry graduate/post-graduate boys only. Hence it is suggested that boys who have studied upto 10th standard or +2, do graduate through correspondence or distance education of a University.
  • இந்தக்காலத்தில் பெண்களில் 95% பெண்கள் பட்டப் படிப்பு படித்து இருக்கிறார்கள். அவர்கள் பட்டப் படிப்பு படித்த ஆண்களையே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள். ஆகவே தங்கள் மகன் ஒரு வேளை 10 வது அல்லது +2 மட்டும் படித்து இருந்தால் உடனடியாக ஏதாவது ஒரு பல்கலைக் கழகத்தில் தபால் மூலம் படிக்கும் வகுப்பில் சேர்ந்து பட்டப் படிப்பு படிக்கச் சொல்லவும். ஜாதகத்தில் பட்டப் படிப்பு படிக்கிறார் என்று எழுதவும்.
  • We pray the Mother Sri Kannika Parameswari to bless your son/daughter to get married soon, the couple to be bestowed with all good things and lead a long happy married life. All the best.
  • தங்கள் மகன் / மகள் திருமணம் விரைவில் சிறப்பாக நடந்தேறி புதுமணத் தம்பதிகள் சகல சௌபாக்கியங்களையும் பெற்று நீண்ட காலம் மனமகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று அன்னை ஸ்ரீ வாசவி கன்னிகாபரமேஸ்வரியை வணங்கி வேண்டிக்கொண்டு வாழ்த்துகிறோம்.

We at "B. R. & Sons Arya Vysya Marriage Bureau" feel that while serving the people of Arya Vysya Community through "cheyyaruvysyavivaham.com" it is our bound duty and responsibility to serve the Society by giving what we thought some useful suggestions. Hence all the above. In case any of you disagree with what are given above or feel that it is overdone and not correct, please ignore, forget and forgive the same.

இப்படிக்கு,

செய்யாறு B.R.&சன்ஸ் ஆர்ய வைஸ்ய மேரேஜ் பீரோ.