User Guide

User Guide / உபயோகிக்கும் முறை

Dear Sir/Madam,

அன்புடையீர்,

Our software is designed for use through a computer or Laptop only. So please do not try to fill application form through mobile phone. எங்கள் சாஃப்ட்வேர் கம்ப்யூட்டர் அல்லது லாப்டாப் மூலம் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே மொபைல் போன் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய முயற்சிக்க வேண்டாம்.

Please use TAB to go to next box while filling the application form.

விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது அடுத்த கட்டத்துக்கு செல்ல TAB ஐப் பயன்படுத்தவும்.

எங்களிடம் ஆன்லைனில் ஜாதகங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கேட்பவர்கள் மட்டுமே இதில் ஜாதகங்கள் பார்க்க முடியும்.

REGISTERED USER என்ற பெயரை க்ளிக் செய்து USER NAME, PASSWORD சமர்ப்பித்தால் தங்களுக்குப் பொருத்தமான ஜாதகங்கள் சுருக்கமாக ஒரு பக்கத்துக்கு 10 ஜாதகங்கள் வீதம் பெட்டிகளில் வரும். ஜாதகம் உள்ள பெட்டியில் கீழே உள்ள SHOW FULL DETAILS என்ற பெயரில் க்ளிக் செய்தால் முழு விவரமும் வரும். தாங்கள் பார்வையிட்டு விரும்பினால் அதில் மேல் பகுதியில் உள்ள பிரின்டர் படத்தின் மேல் க்ளிக் செய்து பிரின்ட் அவுட் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த ஜாதகம் தேவை இல்லை, அடுத்தமுறை பார்க்கும்போது வரக்கூடாது என்று நினைத்தால் பெட்டியின் மேல் பகுதியில் உள்ள "HIDE THIS PROFILE" என்ற வார்த்தையின் மேல் க்ளிக் செய்து மறைத்து வைக்கலாம். நீங்கள் அடுத்த முறை ஜாதகங்கள் பார்க்கும்போது இவை மீண்டும் தெரியாது. மீண்டும் எப்போதாவது பார்க்க விரும்பினால் பக்கவாட்டில் உள்ள "SHOW HIDDEN PROFILES" என்ற பெயரின் மேல் க்ளிக் செய்து நீங்கள் மறைத்து வைத்த ஜாதகங்கள் அனைத்தையும் மீண்டும் பார்க்கலாம்.

அதில் எந்த ஜாதகத்தையாவது மீண்டும் வெளியே கொண்டுவர UNHIDE THIS PROFILE ஐ க்ளிக் செய்யவும்.

REGISTER NOW ன் மேல் க்ளிக் செய்தால் முதலில் எங்கள் நிபந்தனைகள் வரும்.

நிபந்தனைகளைப் படித்துப் பார்த்து சம்மதம் என்றால் கடைசியில் உள்ள வட்டத்தில் க்ளிக் செய்து SUBMIT கொடுத்தால் எங்கள் விண்ணப்படிவம் வரும். படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது உங்கள் கோத்திரத்தையும் தாய் மாமன் கோத்திரத்தையும் நீங்களாக டைப் செய்யக் கூடாது. கோத்திர லிஸ்டில் உங்கள் கோத்திரத்தை டிக் செய்ய வேண்டும்.

எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்து கடைசியில் SUBMIT கொடுத்தால் சில வினாடிகளில் தங்கள் பதிவு எண் வரும். அதைக் குறித்து வைத்துக் கொண்டு எங்களிடம் தொடர்பு கொள்ளும்போதெல்லாம் தங்கள் பதிவு எண்ணைத் தெரிவிக்கவும்.

விண்ணப்பப் படிவத்திலேயே எங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளன.

"EDIT PROFILE" தங்களைப் பற்றிய விவரங்களிலோ, தங்கள் எதிர்பார்ப்புகளிலோ மாறுதல் செய்ய விரும்பினால் இதை க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.

தங்கள் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் மின்னஞ்சல் மூலம் எங்களுக்குத் தெரிவித்து இன்னும் சிறப்பாகத் தங்களுக்கு சேவை செய்ய உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.

We pray Mother Sri Vasavambal to bless your son/daughter to wed quickly and the couple be bestowed with all good things and lead a long happy married life.

தங்கள் மகன்/மகள் திருமணம் விரைவாக நடந்து புதுமணத் தம்பதிகள் சகல சௌபாக்கியங்களையும் பெற்று மன மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று அன்னை ஸ்ரீ வாசவாம்பாளை வணங்கி வேண்டி அன்புடன் வாழ்த்துகிறோம்.

அன்புடன்,

செய்யாறு B.R.&சன்ஸ் ஆர்ய வைஸ்ய மேரேஜ் பீரோ.